கோபிசெட்டிபாளையம் அருகே ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்க முடியாத அவலம்- மனவேதனையில் 13 வயது சிறுமி தீக் குளித்து தற்கொலை

Sep 20 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோபிசெட்டிபாளையம் அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் இல்லாததால் 13 வயது சிறுமி உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி திரு.வேலுமணி என்பவரின் மகள் செல்வி. ஹேமாமாலினி. 8ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடி கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி பாடங்களை படித்து வந்துள்ளார். தொலைக்காட்சியில் பழுது ஏற்பட்டதால் சேனல் சரிவர ஒளிபரப்பாகவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வாங்கி தரும்படி தனது பெற்றோரிடம் ஹேமமாலினி கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கிகொடுத்த பழைய செல்போன் சரிவர இயங்காததால் வேதனையடைந்த ஹேமமாலினி உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00