10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

Sep 20 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரித்தது.

தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி யாருக்கும் தொற்று இல்லை என உறுதிபடுத்தியுள்ளதாகவும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தனித்தேர்வர்களுக்கான தேர்வை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். மேலும், தேர்வு நடத்திய விதம் குறித்து எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், 10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00