உடன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு - உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Aug 12 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்‍க உத்தரவிடக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கில், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்‍கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிவலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தாக்‍கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கிராமங்கள் மற்றும் கடலோர கிராமங்களில் குளங்களில் சவுடு மண் எடுக்‍க அனுமதி பெற்று மணல் எடுப்பதாகவும், சவுடு மணல் எடுக்க அனுமதிக்கக்‍ கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதுபோன்று அனுமதி வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.சத்யநாராயணன், திரு.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு, சட்டவிரோத மணல் கடத்தல்களை தடுக்கக் கோரி தொடர்ச்சியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வண்ணம் உள்ளதாகவும், இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலர், தொழில் துறையின் முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரராக சேர்ப்பதாகவும் தெரிவித்தனர். மணல் எடுப்பது தொடர்பாக தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? - அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன? என்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00