வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மருமகன் குடும்பத்தார் மீது புகார் - 2 மகள்களுடன் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தாய்

Aug 12 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்‍கை எடுக்‍காத மகளிர் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு பெண்வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம்-மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி. ஹேமா பாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மகாலிங்கம் இறந்து விட்டநிலையில் மல்லிகா தனது இருமகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மூத்த மகள் ஹோமாபாரதியை கணவர் குடும்பத்தினர் வரதட்சணைக்‍ கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள ஹேமா பாரதியை வளைகாப்பு நடத்த தாயாரிடம் பணம், நகை வாங்கி வருமாறு கூறி கடந்த சில நாட்களுக்கு முன் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹேமா பாரதி, மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்‍கை எடுக்‍காததால், தனது மகள்களுடன் மல்லிகா மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00