தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் - நீர்நிலைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலேயே பூஜைகளில் ஈடுபடும் பொதுமக்கள்

Aug 2 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆடிப்பெருக்‍கு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் வழக்‍கமான உற்சாகமின்றி பொதுமக்‍கள் நீர்நிலைகளுக்கு பதில் வீடுகளிலேயே இதனை எளிமையாக கொண்டாடுகின்றனர்.

அரியலூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து வெறிச்சோடியது. கொள்ளிடக்கரை, அணைக்கரை. செட்டி ஏரிக்கரை போன்ற பகுதிகளில் சில புது மணத்தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஏரிகளில் விட்டு சடங்குகளை செய்தனர். மாங்கல்யம் நிலைக்கவும், வாழ்வில் வளம்பெருகவும் வேண்டி வாழை இலையிட்டு பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தனர். பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் சடங்கையும் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட காவிரி பாயும் கரைப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் வெளியே செல்ல முடியாத பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே காவிரி நீரை கலசங்களில் வைத்து, வழிபட்டு பின்னர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00