பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் : மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவர் பரிதாப பலி

Jul 13 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவ்வழியே சென்ற செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிணற்றின் உரிமையாளர் உள்ளிட்ட செல்லியம்பாளையம் கிராம மக்கள், சம்பவ இடத்தில் திரண்டு கிணறு வெட்டும் தொழிலாளியான பாஸ்கர் என்ற இளைஞரை கிணற்றுக்குள் விழுந்த ராதாகிருஷ்ணனை காப்பாற்றி மீட்டு வர அனுப்பியுள்ளனர். இதனிடையே தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியின் போது, தீயணைப்பு வீரர்களான ராஜ்குமார், தனபால், பால்ராஜ் மற்றும் கிணறு வெட்டும் தொழிலாளியின் மகனான பாஸ்கரும் என 4 பேரும் மயக்கமடைந்து கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். உடனடியாக மற்றொரு மீட்பு படையினர் விரைந்துவந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதில் ராஜ்குமார் என்ற தீயணைப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், முதலில் விழுந்த ராதாகிருஷ்ணன் இன்னும் மீட்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00