வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர உடனடி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - தமிழக அரசுக்கு, டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Jul 10 2020 2:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் தவித்துவரும் தமிழர்களை உடனடியாக அழைத்து வருவதற்கான நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இப்பணியில், பழனிசாமி அரசும், அதிக எம்.பி.க்‍களை வைத்திருக்‍கும் தி.மு.க.வும் பொறுப்பை தட்டிக்‍கழிக்‍கும் வகையில் நடந்துகொள்ளக்‍கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படிப்பதற்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் கொரோனா பாதிப்பால் அங்கே சிக்கித்தவிப்பதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், இவர்களைப்போன்றே தமிழகத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலையின்றியும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தவிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று தொடக்கம் முதலே கூறப்பட்டு வரும் புகார்களை @CMOTamilNadu இப்போதாவது காது கொடுத்து கேட்க வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் தவித்துவருபவர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து செய்யவேண்டிய இப்பணியில் பழனிசாமி அரசும், அதிக எம்.பிக்களை வைத்திருக்கும் தி.மு.கவும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00