மணப்பாறை அருகே திருமண ஆசைகாட்டி பாலியல் கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்ட சிறுமி தற்கொலை - போலீசார் உரிய நடவடிக்‍கை எடுக்‍காததால் பரிதாப பலி

Jul 9 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் விஷமருந்தி உயிரிழந்த சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மணப்பாறை அருகே 17 வயது சிறுமி ஒருவர், உறவினர் ஒருவரால் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், மாணவி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளக்கோரி சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட ராம்கி என்ற நபரிடம் கூறிவந்த நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி சிறுமி மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம்கி என்ற நபர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே சிறுமியின் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இரவோடு இரவாக சிறுமியின் உடல் கவரப்பட்டி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மண்டல ஐ.ஜி.திரு.ஜெயராம், சிறுமி இறப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00