நாகை மாவட்ட காவல் நிலையத்தில் காவலர் திட்டியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Jul 4 2020 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர், ஒருமையில் பேசியதால் மனமுடைந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியை அடுத்த ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர், பாண்டியன். இவரது குடும்பத்திற்கும், அருகே வசிக்கும் புஷ்பநாதன் என்பவரது குடும்பத்திற்கும் அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சீர்காழி காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., திரு. கலியமூர்த்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, விவசாயி பாண்டியனை, அவரது மகள் முன்பு எஸ்.எஸ்.ஐ., திரு. கலியமூர்த்தி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாண்டியன், தனது வயலுக்கு சென்று விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் பாண்டியனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00