வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் புதுச்சேரி மற்றும் பரவலாக மழை - வெப்பம் தணிந்தது

Jul 3 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

புதுச்சேரி நகரப்பகுதிகளான முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களிலும், கிராமப்பகுதிகளான திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, பத்துக்கண்ணு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த மழை காரணமாக சாலைகளின் இரு புறங்களிலும் மழை நீர் வெள்ளமென ஓடியது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் காடாம்புலியூர், நெல்லிக்குப்பம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டிவந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், மயிலம், கோலியனூர், காணை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00