சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய 2 காவலர்கள் கைது - தலைமறைவாக இருந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணனையும் கைது செய்தது சிபிசிஐடி

Jul 2 2020 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளா் ரகு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 2 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தந்தை-மகன் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கரன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறையில் ரகு கணேஷ் அடைக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐ.ஜி. சங்கா், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் போகப் போக இன்னும் நிறைய விஷயங்கள் தெரியவரலாம் என்றார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையே முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய காவலர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொரு உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணன் தலைமறைவாகி இருந்த நிலையில், அவரையும் இன்று அதிகாலையில் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00