மாநகர பேருந்துகளில் அதிகளவில் பயணிக்கும் பொதுமக்கள் : பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்

Jun 3 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாநகரப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொதுமக்கள் பயணிப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநகரப் பகுதியில் 263 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், எந்தவொரு பேருந்துகளிலும் அரசின் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை. குறிப்பாக 2 நபர்கள் அமரக்கூடிய இருக்கையில் ஒரு நபர் மட்டுமே அமர வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு, அதிகளவிலான பயணிகள் ஏற்றப்படுகின்றனர். ஓட்டுநர்களும், கையுறை அணியாமல், பேருந்தை இயக்குகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் இவ்வாறு அலட்சியத்துடன் செயல்படுவதால், சேலத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் சில வழித்தடங்களில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதாலும், முகக்‍கவசம் அணியாமல் பயணிகள் பயணம் செய்வதாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00