பெரம்பலூரில் காதல் பிரச்னையில் பிரபல ரவுடி படுகொலை : 10க்கும் மேற்பட்டோரால் ரவுடி தாக்கப்பட்ட வீடியோ வெளியீடு

Jun 2 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூரில், காதல் பிரச்னையால் கொல்லப்பட்ட ரவுடி, கொலை செய்யப்படுவதற்கு முன்பு 10க்கும் மேற்பட்டோரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள துறைமங்களம் கே.கே.நகரில் வசித்து வந்த பிரபல ரவுடி கபிலன், அங்குள்ள மயானத்திற்குச் செல்லும் சாலையில், நேற்றிரவு, கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கபிலன், வீடு புகுந்து தங்களை தாக்கியதாக, சுப்பிரமணி-தனலட்சுமி தம்பதியர், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். விசாரணையில், ரவுடி கபிலன், அவர்களது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததும், அந்த பெண்ணின் சகோதரர் கண்டித்ததால் குடிபோதையில் அவர்களது வீட்டிற்குச்சென்று தகராறு செய்ததும், இதற்கு பதிலடியாக பெண்ணின் உறவினர்கள் கபிபலனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி கபிலன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், 10க்கும் மேற்பட்டோரால் ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்ட செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00