தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

May 31 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை நாளை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸி வாகனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தளர்வுகள் குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் நாளை பேருந்துகள் 50 சதவிகிதம் இயக்கப்படும் என்றும், 60 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து தடை தொடர்ந்து நீடிக்கிறது. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், அங்கிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

வழிப்பாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு உள்ள தடை தொடர்நது நடைமுறையில் இருக்கும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி வரும் 8ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது - மொத்த இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர அனுமதிக்கப்படும் -ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்களை இயக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளர்களுக்கும் சிறப்பினமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு ஊதியம் வழங்கப்படும். நோய் தடுப்பிற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். சென்னையில் ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும், சைக்கிள் ரிக்ஷாக்களை இயக்கலாம் என்றும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00