சென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று

May 31 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், 938 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும், 616 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 ஆயிரத்து 246 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 938 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை பதிவாகாத அதிகபட்ச அளவாகும். இதன்மூலம், மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்‌கை 21 ஆயிரத்து 184 ‍ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 687 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு நேற்று மேலும் 6 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும், 616 ‍பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 94 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில், 28 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00