தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்

May 28 2020 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமமுக சார்பில், ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர்கள், ஆதரவற்ற பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய செயலாளர் திரு. கு. காளிதாஸ் ஏற்பாட்டில் மேடவாக்கம் ஊராட்சி செயலாளர் திரு.கு. செல்வகுமார் தலைமையில் வடுகப்பட்டி திருவெங்கடம் நகர் திருவெங்கடம் 1வது மற்றும் 2வது தெரு, தர்மபூபதி தெரு அகிய பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் கோதுமை சர்க்கரை மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. ம. கரிகாலன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு. கு. கோடீஸ்வரன், ஒன்றிய மாணவரணி இணைச்செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் வழங்கினர்.

நான்குநேரி ஒன்றிய அம்மா பேரவை சார்பில் மூலக்கரைப்பட்டியில் சுமார் 250 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன், அமைப்புச் செயலாளர் திரு. A. P. பால் கண்ணன் ஆகியோர் வழங்கினர். நாங்குநேரி ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லத்துரை, நான்குநேரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தங்க மாரியப்பன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளின் குடும்பத்துக்கு அரிசி, ஐந்து வகையான காய்கறிகள் வழங்கப்பட்டன. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு.எட்வீன்பாண்டியன், எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.கார்த்திக் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் காரைக்குடி அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் 100 ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரிசி, மளிகை, காய்கறி ஆகியவற்றை மாவட்ட செயலாளர் திரு.தேர்போகி வி.பாண்டி வழங்கினார். சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. கார்த்திக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் வடக்கு மாவட்டம் நல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஐவதக்குடி, சேப்பாக்கம், வேப்பூர் ஆகிய ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. எஸ்.ஆர்.ஏழுமலை ஏற்பாட்டில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் திரு. டாக்டர் ராஜா பழனிவேல் தலைமையில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.அக்ரி.பி.முருகேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00