உடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு

May 24 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரை அடுத்த உடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் ரொக்‍கப் பணம் மற்றும் சொகுசு காரை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியில் வசித்து வரும் 74 வயதான பழனிச்சாமி, உரக்‍கடை மற்றும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டின் முன்பக்‍க கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், பழனிசாமியை அரிவாளைக்‍ கொண்டு தாக்‍கி, 16 லட்சம் ரூபாய் ரொக்‍கப்பணம் மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், வீட்டின் முன்னால் இருந்த சி.சி.டிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து, ஹார்ட் டிஸ்குகளையும் தூக்கிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00