கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றினைய வேண்டும் : இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

Apr 2 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றினைய வேண்டுமென இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடு முழுவதும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் மருத்துர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மக்களைக் காப்பாற்ற தன்னலமின்றி மருத்துவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகையே தலைகீழாக மாற்றியுள்ள கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த, வேறுபாடுகளை கலந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், முதியோர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடவுள் நம்முடைய இதயத்திலேயே இருக்கிறார் - எனவே மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல - அரசின் அறிவுரையை ஏற்று, ஒவ்வொரும் தங்களை சில வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டால், ஆயுட்காலம் பல ஆண்டுகள் நீடிக்கும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை நம் கையிலேயே உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00