தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை கொரோனா பாதிப்புக்கு போதுமானதாக இருக்காது - வாழ்வாதாரங்களை இழந்திருப்பதால் பொதுமக்கள் கோரிக்கை

Apr 2 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் போதாது என்றும், வாழ்வாதாரத்தையே இழந்துள்ளதால் கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்‍கு, கொரோனா நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடங்கியது. வரும் 15ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதத்திற்கான மண்ணெண்ணெய், சர்க்‍கரை, சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வழங்கப்படும். ரேஷன் கடைகளில் நாளொன்றுக்‍கு 100 நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சென்னையில் தீயணைப்பு துறை சார்பில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ரேஷன் கடைகளிலேயே டோக்கன் வழங்கப்பட்டதால் மக்‍கள் கூட்டம் அலைமோதியது.

கொரோனா தடை உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தையே இழந்து லட்சக்‍கணக்‍கான மக்‍கள் தவித்து வரும் நிலையில், தமிழக அரசின் நிவாரண உதவி போதாது என்றும், பாதிப்புகளை கருத்தில் கொண்டு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நியாயவிலைக்‍கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளுக்‍குச் சென்ற பொதுமக்‍கள், சமூக விலகலை கடைபிடிக்‍கும் வகையில், அங்கு வரையப்பட்டுள்ள கட்டங்களில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

ரேஷன் பொருட்களைப் பெற்றுக்‍கொள்ளும் வகையில் வீடுகளுக்‍கே சென்று டோக்‍கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் டோக்‍கன்கள் கிடைக்‍கப்பெறவில்லை என பொதுமக்‍கள் தெரிவித்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்‍காமல், கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியுடன் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதியினர் வசிக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்பட்டது. நியாய விலைக் கடைக்கு வருவோருக்‍கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00