தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா - 77,333 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தகவல்

Apr 2 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், ‍நேற்று ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் திருமதி. பீலா ராஜேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இவர்கள் 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 190 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று தமிழகம் திரும்பியவர்கள் என்றும் தெரிவித்தார். இதுவரை டெல்லி சென்று திரும்பிய ஆயிரத்து 103 பேரும் தாமாக முன்வந்து அவர்களுடைய தகவலை சுகாதாரத் துறைக்கு தெரிவித்ததாகவும், அதில் 658 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டெல்லி சென்று திரும்பிய ஆயிரத்து 103 பேரின் வீடுகள் கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகளை சுற்றியுள்ள நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், 77 ஆயிரத்து 333 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் திருமதி. பீலா ராஜேஷ் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00