சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று குறைந்த அளவே மீன்வரத்து - கொரோனா வைரஸ் விழிப்புணர்வை மறந்து முண்டியடித்தபடி மீன்களை வாங்கக்‍ குவிந்த பொதுமக்‍கள்

Mar 29 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை காசிமேடு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன்வரத்து உள்ளதால், கொரோனா வைரஸ் விழிப்புணர்வை அலட்சியம் செய்த பொதுமக்கள், முண்டியடித்தபடி மீன்களை வாங்கக்‍ குவிந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் சமூகப் பொறுப்பை மறந்து கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு வருகின்றனர். சென்னை காசிமேடு மீன் சந்தையில், அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில், கடைகளின் எதிரே போடப்பட்டுள்ள வட்டங்களிலும் பொதுமக்கள் நிற்காமல் பேரம் ‍பேசுவதாகவும் கூறப்படுகிறது. நோய்த் தொற்று பரவாமலிருக்க இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணியாமலும், வியாபாரிகள் அலட்சியமாக உள்ளனர். பாதுகாப்பு பணிக்கு போதுமான போலீசார் இல்லாததால், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00