சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்? - மாநகராட்சி விளக்‍கம்

Mar 28 2020 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில், கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது. நடிகை கவுதமி அண்மையில் துபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில், அவரது பாஸ்போர்ட்டில் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலக முகவரி இருந்ததால், இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்‍கம் அளிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்‍கு கொரோனா அறிகுறி இருக்‍கலாம் என்ற அச்சத்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சந்தேகிக்‍கப்படும் நபர்களின் வீடுகளில் மாநகராட்சி சார்பில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்ட தகவல் வெளியானது.

நடிகை கவுதமி அண்மையில் துபாய் சென்று நாடு திரும்பிய நிலையில், அவரது பாஸ்போர்ட் முகவரியில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக முகவரி இடம்பெற்றுள்ளதால், கொரோனா தடுப்பு குறித்த சுவரொட்டி ஒட்டப்பட்டதாகவும், பின்னர் அது அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்‍கப்பட்டது.

இதனிடையே, இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், கடந்த சில ஆண்டுகளாக, தான் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வசிக்‍கவில்லை என்றும், அவ்விடத்தில் மக்‍கள் நீதி மய்ய அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மையல்ல என்றும், கடந்த 2 வாரங்களாக, தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்‍ கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00