தமிழகத்தில் மளிகைக்கடைகள், உணவகங்கள் நேர வரம்பின்றி நாள் முழுவதும் இயங்கலாம் - நேர வரம்பு குறைக்கப்படவில்லை என்றும் என தமிழக அரசு அறிவிப்பு

Mar 26 2020 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உணவகங்கள், மளிகைக்‍கடைகள் செயல்பட நேர வரம்பு விதிக்‍கப்படவில்லை என்றும், நாள் முழுவதும் இயங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்‍கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக்‍ கொண்ட 9 குழுக்‍கள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக கண்காணிக்‍கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்‍குழுக்‍கள் ஆகியவை தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூலித்து வருவதாகவும், தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்‍குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்‍க வேண்டும் என்றும், இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்‍கைகள் தொடரப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. காய்கறி, பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்‍க வேண்டும் - அப்போது மக்‍களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்‍க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக்‍கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்.ஐ.வி. தொற்று உள்ளோர், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாதிரிரைகள் பெறுகின்றனர் - அவர்களுக்‍கு இரு மாதங்களுக்‍கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்‍கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும், தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்‍குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும் - கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகள் அனுமதிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00