தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு

Mar 25 2020 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க, உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருவதால், இன்று முதல் 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு காரணமாக, நீதித்துறை ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, நீதிமன்றப் பணிகளை நிறுத்தி வைப்பதென, உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை என அவர் வெளியிட்டுள் அறீவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதன்பின், அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் இடம், நேரடி விசாரணையா அல்லது காணொளி காட்சி மூலம் விசாரணையா என பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக, சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை பதிவாளர்களை, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே கீழமை நீதிமன்றங்கள், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00