தமிழகத்தில் மக்‍கள் நடமாட்டத்தை குறைக்‍க போலீசார் நடவடிக்‍கை - வாகன தணிக்‍கை தீவிரம்

Mar 25 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் 144 உத்தரவு கடைப்பிடிக்‍கப்பட்டுவருவதையொட்டி, மக்‍கள் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்‍கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் காலை நேரத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்‍கள் கடைகளுக்‍கு வந்திருந்தனர். இந்த நிலையில் மக்‍கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த போலீசார் வாகன தணிக்‍கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேம்பாலங்கள் அடைக்‍கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்‍கான வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதிக்‍கின்றனர். தேவையின்றி வெளியே பயணிக்‍கும் நபர்களை சோதனை செய்து அவர்களுக்‍கு எச்சரிக்‍கை விடுத்து போலீசார் அனுப்பி வைக்‍கின்றனர்.

சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் வந்தவர்களிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் இருகரங்களை கூப்பி, விதிமுறைகளை கடைப்பிடிக்‍கும்படி கேட்டுக்‍கொண்டார்.

கோவையில் காந்திபுரம், சிங்கநல்லூர், உக்கடம், சாய்பாபா காலணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அடைக்‍கப்பட்டுள்ளன. காண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்‍காக செல்வோர் முகக்‍ கவசங்களை அணிந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைப் பகுதிகள் அடைக்‍கப்பட்டுள்ளன. நாகை துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்‍கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் நடவடிக்‍கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்‍கும் சாலைகள் அடைக்‍கப்பட்டு சோதனைச் சாவடிகள் அமைக்‍கப்பட்டுள்ளன. அண்டை மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் தணிக்‍கை செய்யப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00