பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட நோயாளி - சொத்தை பத்திரப்பதிவு செய்யக்‍கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டம்

Feb 28 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்து வந்து சொத்தை பத்திரப்பதிவு செய்யக்‍கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் வாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக நரம்புத் தளர்ச்சியால் வாய், கை, கால் உள்ளிட்டவை சரிவர இயங்காமல் பாதிக்‍கப்பட்டுள்ளார். இவருக்‍கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மனைவி மஞ்சுளா கரூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். மகள் சுரபி, புதுச்சேரியில் பி.டி.எஸ் மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார்.

ராஜாராமுக்கு சொந்தமாக ஏழூர் என்ற இடத்தில் ஆயிரம் சதுர அடி வீட்டுமனை உள்ளது. இதனை மகளின் மருத்துவப் படிப்பு தேவைக்‍காக தனது பெயருக்‍கு மாற்றி மகளின் கல்விக்‍கட்டணம் செலுத்த மஞ்சுளா முடிவு செய்தார்.

இதையடுத்து, வீட்டுமனையை தனது பெயரில் மாற்றி எழுதுவதற்காக, உடல்நிலை பாதித்த கணவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு மஞ்சுளா அழைத்துவந்துள்ளார்.

ஆனால் ராஜாராமனின் உடல்நிலை சரியில்லாததால் தற்போது பத்திரப்பதிவு செய்ய முடியாது எனக்‍கூறி பத்திரப்பதிவு அலுவலர் திரு. செல்வபாலமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது கணவர் சுய நினைவில் இருப்பதற்கான மருத்துவச் சான்று இருப்பதாக மஞ்சுளா கூறியதை ஏற்க பத்திரப்பதிவு அலுவலர் மறுத்ததால், மஞ்சுளா மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00