அம்மா பிறந்த நாள் - அ.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Feb 27 2020 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட கழகம், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி சார்பில், மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பரணிபுத்தூர் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மா திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கேக் வெட்டி, இனிப்பு, பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், குன்றத்தூர் ஒன்றிய அமமுக மகளிர் அணி செயலாளர் என்.சுஜா, நகர கழக செயலாளர் ஜி.ரோஸ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் ஏ.பெரியநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மகராஜன் நகரில், மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 6 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை, நெல்லை மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. A.P. பால்கண்ணன் ஆகியோர் வழங்கினர். நெல்லை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. பொன்னுச்சாமி, நெல்லை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. இசக்கிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்ட கழகம் சார்பில், கூடலூர் ஒன்றியம் மசினகுடியில், மாண்புமிகு அம்மா பிறந்த நாள் பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடியின் துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அதிமுக, திமுக கட்சிகளை சேர்ந்த 200 பேர், அக்‍கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் Dr. செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி வடக்கு மாவட்டம், பூவாளூர் பேரூராட்சி கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர். மனோகரன் பங்கேற்று, கழகக் கொடியினை ஏற்றிவைத்து, பின்னர் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சவரிமுத்து, மகளிர் அணி செயலாளர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலைக்கோட்டை கீழப்புலிவார் ரோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாண்புமிகு அம்மா பிறந்த நாளன்று பிறந்த இரு குழந்தைகளுக்கு, திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் ​திரு. ஜெ.சீனிவாசன் பங்கேற்று, இரு குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்து பரிசுகளும் வழங்கினார். இதில், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. வேதாந்திரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஷ. ராஜலிசங்கம் தலைமையில், முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, கழக மகளிரணி செயலாளர் திரு. வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, அம்மா - சின்னம்மா நட்பு குறித்தும், அம்மாவின் அரசியல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சேலை, வாஷிங் மிஷின், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் உரையாற்றிய செல்வி சி.ஆர். சரஸ்வதி, எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு அம்மாவை விட திறமையாக ஆட்சி செய்கிறார் என பணத்திற்காக பேசும் அமைச்சர்களுக்கு துரோக உணர்வு இல்லையா என கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00