மாநகராட்சி ஊழல் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு - நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி முடிவுவெடுக்க கூடாது என உத்தரவு

Feb 25 2020 9:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான மாநகராட்சி ஊழல் வழக்கில், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் லஞ்ச ஒழிப்பு துறை இறுதி முடிவுவெடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் ஏற்படுத்தல் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரியும் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த ஊழலில், ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ளும் விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் அனுதியில்லாமல் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இறுதி முடிவு எடுக்க கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00