சென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு - 60 ஏஜெண்டுகளை கைது செய்து போலீசார் நடவடிக்‍கை

Feb 19 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்து வந்த 60 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி ஏஜெண்டுகள் பலர் முறைகேடாக தட்கல் டிக்கெட்டை பதிவு செய்வதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்து போய் விடுவதாகவும், இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றமடைவதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும், ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோதமான மென்பொருட்களை பயன்படுத்தி, ஏஜெண்டுகள் முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மென்பொருட்களை முடக்கிய போலீசார், பல்வேறு ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்தனர். இந்த ஏஜெண்டுகள், ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் மதிப்பில் டிக்கெட்டுகளை பதிவு செய்து வந்ததாகவும், இவர்கள் கைது செய்யப்பட்டதால் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00