உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளது : மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது

Jan 29 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில், உள்ளாட்சி தேர்தலில் நான்கு பதவிகளுக்‍கான வாக்குச்சீட்டுகளும் ஒரே வாக்‍குப்பெட்டியில் போடப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுவதாகவும், தனித்தனியாக பெட்டிகள் வைக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டது. அப்போது வாதிட்ட தேர்தல் ஆணயம் தரப்பு வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00