குரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கைமாறியிருக்க வாய்ப்பு என தகவல்

Jan 29 2020 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
குரூப் 4 தேர்வு முறைகேடுகளுக்‍கு துணை போனதாக கூறப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி நெருங்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்‍கில் கைதாகியுள்ள ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் தலைமையில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி.யில் ஓம்காந்தனின் மேலதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனா். இதனால் ஓரிரு நாளில், இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்‍க சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டால், கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் 10 கோடி ரூபாய்க்‍கும்மேல் கைமாறியிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கருதுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00