குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு : முறைகேடுகளுக்கு உதவிய டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை நெருங்கியது சி.பி.சி.ஐ.டி

Jan 29 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இவ்வழக்‍கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 39 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த 39 நபர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார்., டின்.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இடைத்தரகர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்‍ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் மற்றும் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தனர். அவர்களை நீதிமன்றக்‍ காவலில் வைத்து விசாரிக்க 15 நாட்கள் அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00