சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் அமைக்‍கப்படவுள்ள கடைகள் - 5 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்‍க நீதிமன்றம் உத்தரவு

Jan 23 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் அமைத்து தரப்படவுள்ள கடைகளுக்கு, குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினாவில் 27 கோடி ரூபாய் செலவில், 900 கடைகளை மாநகராட்சியே அமைத்துத் தர இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குகள், நீதிபதிகள் திரு. வினீத் கோத்தாரி, திரு. சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில், பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், அக்கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் 100 ரூபாய் வாடகை என்பது ஏற்புடையதல்ல என்றும், குறைந்த பட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க என்றும் கூறிய நீதிபதிகள், விரைவில் டெண்டரை இறுதி செய்து கடைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00