அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பு

Jan 21 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் திரளாகப் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம், கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. கழக துணைத் தலைவர் திரு.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் திரு.பி.எஸ்.எம் தங்கவேல், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் திரு.ஆர்.எம்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கடவூர், குளித்தலை ஒன்றியங்களைச் சேர்ந்த தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட மாற்றுக்‍ கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி, அ.ம.மு.க.வில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்ட அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், தருமபுரி குமாரசாமிபேட்டை மைதானத்தில் நடைபெற்றது. அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு.பி.பழனியப்பன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழை-எளியோருக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீரங்கத்தில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் திரு.வீரமணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் ஜெயங்கொண்டத்தில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் திரு.துரைமணிவேல், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் கதிர்காமு, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு.கார்த்திகேயன், தலைமை கழக பேச்சாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன், கழக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் திரு.கே.கே.சிவசாமி, கழக மருத்துவரணி தலைவர் டாக்டர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அம்மா பேரவை துணைச் செயலாளர் ஏ.செல்வராஜ் கழக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வீரமணி மற்றும் பொதுமக்‍கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் எல்லிஸ்நகர் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் ஷ.ராஜலிங்கம், கழக அமைப்பு செயலாளர் திரு.சிவசண்முகம், கழக இலக்கிய அணிச் செயலாளர் திரு.R.S.K. துரை, கழக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பரமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு பகுதியில், அ.ம.மு.க கிழக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.ராமுத்தேவர், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.கே.பி.நல்லசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு.தங்கதுரை, தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை வடக்‍கு மாவட்டக்‍கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். ​பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், களம்பூர் பகுதியில் நடைபெற்றது. வடக்‍கு மாவட்டச்செயலாளர் திரு.வரதராஜன், கழக அமைப்புச் செயலாளர் திரு.நேதாஜி கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.பையூர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00