புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நெகிழ்ச்சியுடன் நினைவில் போற்றும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் - எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Jan 17 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பம்மல் நகரக் கழகச் செயலாளர் திரு.P.ஜெய கோபி தலைமையில், பம்மல் அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்‍கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு.ம.கரிகாலன் பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கினார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூர் நகரக் கழகச் செயலாளர் திரு.பிரகாஷ் தலைமையில், அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூரை அடுத்த கங்களாஞ்சேரி கடைவீதியில் கழகத்தின் சார்பில் ஊராட்சி கழக செயலாளர் திரு. சாமிநாதன் தலைமையில், எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வடசென்னை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், ஆர்.கே.நகரின் 14 இடங்களில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ படங்களுக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அங்கு கூடியிருந்தோருக்கு இனிப்புகள் வழங்கினர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், ராமபுரத்தில், அலங்கரிக்‍கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.இ.லக்கி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்‍களுக்‍கு சர்க்‍கரை பொங்கல் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட கழகம் சார்பில் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே, மாவட்ட கழக செயலாளர் திரு. பி.எஸ்.என்.தங்கவேல் தலைமையில், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்‍கப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாமக்‍கல் ராசிபுரம் நகர கழகம் சார்பில், கழக அம்மா பேரவை இணைச்செயலர் திரு. ஏ.பி.பழனிவேல் தலைமையில், எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நாமக்‍கல் வெண்ணந்தூர் ஒன்றிய கழகம் சார்பில், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலர் திரு.என்.கோபால் தலைமையில், எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்‍கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00