மும்பையில் உத்தவ் தாக்கரேவின் தசரா ஊர்வலத்தை தடுக்க மாட்டோம் : மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக ஏக்நாத் ஷிண்டே கருத்து

Oct 3 2022 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே நடத்தவிருக்கும் தசரா ஊர்வலத்தின் அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிலிருந்து திரு.ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் தசரா பண்டிகையையொட்டி தங்கள் ஆதரவாளர்கள் சார்பில் ஊர்வலம் நடத்த உத்தவத் தாக்கரே திட்டமிட்டார்.

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தசரா ஊர்வலம் நடத்த மும்பை உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷிண்டே, இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00