ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில், வீரமரணம் அடைந்த ஹைதர் அலி, திப்பு சுல்தான் நினைவாக, மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு : சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தை புனரமைக்கவும் நடவடிக்கை

May 15 2013 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை மந்தைவெளி பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்தார். ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவருமான சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத்தளபதியாய் விளங்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத்தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படவிருக்கும் வளாகத்திலேயே ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00