சர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸிக்‍கு மீண்டும் கௌரவம் - 6வது முறையாக "Ballon d Or" விருதை வென்று சாதனை

Dec 3 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல கால்பந்து நட்சத்திரமான ஆர்ஜென்டினாவின் Lionel Messi, ஆறாவது முறையாக "Ballon d Or" விருது வென்று சாதனை புரிந்துள்ளார்.

கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் பெருமைக்‍குரிய "Ballon d Or" விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்‍கு ஆர்ஜென்டினாவின் Lionel Messi தேர்வானார். கடந்த 2015-ல் கடைசியாக "Ballon d Or" விருதை வென்ற மெஸ்ஸி, தற்போது ஆறாவது முறையாக இந்த விருதை வென்று சாதனையை புரிந்துள்ளார். அவரது போட்டி வீரராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை மட்டுமே விருது பெற்றிருந்த நிலையில், 6-வது முறையாக விருது பெற்று மெஸ்ஸி சாதித்துள்ளார். பாரீசில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், Lionel Messi-க்‍கு விருது வழங்கப்பட்டது.

விருதை வாங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மெஸ்ஸி, தனது முதல் விருதை இதே பாரிஸில் வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், 22 வயதான அப்போது என்ன நடக்கிறது என்பதை சிந்திக்க முடியாதவனாக இருந்தாகவும் தெரிவித்தார். இரண்டாம் இடத்தை லிவர்பூல் அணியின் விர்ஜில் வான் டிஜிக் பிடித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, மூன்றாம் இடத்தையே பிடித்தார்.

இதேபோல், மகளிருக்‍கான "Ballon d Or" விருதை, அமெரிக்க கால்பந்து வீராங்கனை மேகன் ரேப்பினோ வென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00