தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் : முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்

Oct 4 2019 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், 502 ரன்கள் குவித்த இந்திய அணி, டிக்ளேர் செய்தது.

இந்தியா- தென்னாப்ரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக முதல்முறையாக களமிறங்கிய ரோகித் சர்மா, Mayank Agarwal ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்திருந்தபோது, ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்தனர். 176 ரன்களுக்கு ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 6 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 20 ரன்னிலும் வெளியேறினர். சிறப்பாக விளையாடிய Mayank Agarwal, டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 215 ரன்களைக் குவித்த நிலையில், Mayank Agarwal, ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் விராட் கோலி, போட்டியை டிக்ளேர் செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00