T20 போட்டியில், நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா - 4 பந்துகளில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

Sep 7 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி 20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கிய நிலையில், மூன்றாவது ஓவரை இலங்கையின் நட்சத்திர வீரர் லஷித் மலிங்கா வீசினார். முன்ரோ, ரூதர்ஃபோர்டு, கிராண்ட் ஹோமி, ரோஸ் டைலர் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி மலிங்கா சாதனை படைத்தார். மேலும் முன்ரோவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் அச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00