திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி : ஜமால் முகம்மது கல்லூரி அணி சாம்பியன்

Sep 6 2019 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரியை வீழ்த்தி, ஜமால் முகம்மது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள செயற்கை இழை மைதானத்தில் நடைபெற்றது. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 23 கல்லூரிகளிலிருந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியும், ஜமால் முகம்மது கல்லூரி அணியும் மோதின. இதில், 3-2 என்ற கோல் கணக்கில், பிஷப் ஹீபர் கல்லூரி அணியை வீழ்த்தி, ஜமால் முகம்மது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள், பெண்கள் அணிகளும், கலப்பு அணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00