சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு - 2021 உலகக்‍ கோப்பை தொடரில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்

Sep 3 2019 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்‌தைச் சேர்ந்த, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ், 2006 ஆம் ஆண்டு முதல், சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 89 சர்வதேச டி20 போட‌்டிகளில் விளையாடி உள்ள மிதாலி ராஜ், 2 ஆயிரத்து 364 ரன்கள் குவித்துள்ளார். இதில், 17 அரைசதங்களும் அடங்கும்.

கடைசியாக, மார்ச் மாதம் 9 ஆம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட‌்டியில் மிதாலி ராஜ் விளையாடினார். இந்நிலையில் இன்று, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, மிதாலி ராஜ் அனுப்பி உள்ள கடிதத்தில், 2006 ஆம் ஆண்டு முதல், இந்திய அணிக்காக, சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதாகவும் 2021 ஆம் ஆண்டு நடை‍பெறும் உலகக் ‍கோப்பை ஒரு நாள் தொடரில் கவனம் செலுத்த உள்ளதால், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாகவும் தனக்கு வாய்ப்பு வழங்கிய, பி.சி.சி.ஐ.க்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00