உலகக்‍ கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்‍குள் நுழைந்தது இங்கிலாந்து

Jul 4 2019 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍ கோப்பை கிரிக்கெட் லீக்‍ போட்டியில், நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டம் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

50 ஒவர்களில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் நீஷம், ஹென்றி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணியின் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 106 ரன்கள் குவித்த Jonny Bairstow ஆட்ட நாயகனாக அறிவிக்‍கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்‍கு நுழைந்துள்ளது.

இதனிடையே, லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 42-வது லீக்‍ ஆட்டத்தில், அஃப்கனிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00