உலகக்கோப்பை கிரிக்கெட்: தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி
Nov 20 2023 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னணி வீரர் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, 11 ஆட்டங்களில் 3 சதம், 6 அரைசதத்துடன் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, தொடர் நாயகனுக்கான விருதினை விராட் கோலிக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வழங்கினார்.