சீனாவில் 19வது ஆசியக்கோப்பை போட்டிகள் இன்று முதல் துவக்கம் : இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Sep 23 2023 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் கொண்டாடப்படுகிறது. 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ் உள்ளிட்ட
40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 39 விளையாட்டுகளில் இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியநேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில், சீன அதிபா் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது