கால் பந்தாட்டப் போட்டியின் இடையே ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டி : வளைகுடா நாடுகளில் இருந்து வந்த ஏராளமான ஒட்டகங்கள் பங்கேற்பு
Dec 2 2022 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடந்து வரும் நிலையில், அங்கு நடைபெற்ற, ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டியும் அனைவரையும் கவர்ந்துள்ளது. Ash-Shahaniyahவில் நடைபெற்ற இப்போட்டியில், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த ஏராளமான ஒட்டகங்கள் பங்கேற்றன. இந்த ஒட்டகங்களில் எது அழகாக இருக்கிறது என்ற போட்டியும், எந்த ஒட்டகம் அதிக பால் தருகிறது என்ற போட்டியும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கால் பந்தாட்டப் போட்டிக்கு இடையே நடைபெற்ற இது போன்ற போட்டியும் உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை ஈத்துள்ளது.