இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து : 1-0 என்ற கணக்கில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது நியூசிலாந்து
Nov 30 2022 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழையின் காரணமாக கைவிடப்பட்டதால், நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 47 புள்ளி 3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பின்னர், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது.