உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டங்கள் : ஈகுவெடார் - செனகல்; நெதர்லாந்து - கத்தார் அணிகள் இன்று மோதல்
Nov 29 2022 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில், குரூப்-ஏ பிரிவுக்கான போட்டியில், ஈகுவெடார் - செனகல் அணிகளும், மற்றொரு குரூப்-ஏ பிரிவுக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து - கத்தார் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனையடுத்து, நள்ளிரவு 12.30 மணிக்கு குரூப்-பி பிரிவுக்கான இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் ஒரு போட்டியில், ஈரான் - அமெரிக்கா அணிகளும், மற்றொரு போட்டியில் வேல்ஸ் - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.