இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளை 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி
Nov 29 2022 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாளை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியநேரப்படி நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியிலும் மழை குறுக்கீட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.