தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

Oct 3 2022 6:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர், டி20 உலகக்கோப்பை தொடருக்காக வரும் வாரத்தில் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரிலுள்ள வீரர்கள் யாரும் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00